பெரம்பலூர் அருகே தாயைக் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய மகனையும், அதற்கு உடந்தையாக இருந்த தந்தையையும் போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், ஆலம்பாடி பகுதியைச் சேர்ந்த பரமஜோதி என்பவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், 5 மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
மகள்களுக்கு திருமணமான நிலையில், மகன் சிவசங்கர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 19ஆம் தேதி கார் வாங்கப்போவதாகத் தாயிடம் சிவசங்கர் தெரிவித்தபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதனால், ஆத்திரமடைந்த சிவசங்கர் தாயைக் கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் தெரிகிறது.
அப்போது, அங்கு வந்த தந்தையிடம் சிவசங்கர் நடந்தவற்றைக் கூறியதை அடுத்து இருவரும் சேர்ந்து கலைச்செல்வி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியுள்ளனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் கலைச்செல்வி கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டது தெரியவரவே, தந்தை மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.