கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உயர் மின்னழுத்தம் காரணமாக 50க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்மீட்டர்கள், மின்சாதன பொருட்கள் பழுதடைந்தன.
புதூர் கொல்லமாட்டாய் பகுதியில் உயர் மின்னழுத்த கம்பி அறுந்து குறைந்த மின் அழுத்தக் கம்பி மீது விழுந்துள்ளது. இதனால் பலவீடுகளில் மின்மீட்டர்கள் வெடித்துச் சிதறின.
மேலும், 50க்கும் மேற்பட்ட வீடுகளில் மின் சாதனப்பொருட்கள் பழுதடைந்தன. இந்த விபத்துக்கு மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே காரணம் எனத் தெரிவித்த பொதுமக்கள் உரிய நிவாரணத்தை அரசு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.