வார் 2 படத்தில் ஜூனியர் என்டிஆரின் திரை நேரம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஜூனியர் என்டிஆர் மற்றும் ஹிருத்திக் ரோஷன் இணைந்து வார் 2 எனும் ஆக்சன் திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
இது ஜூனியர் என்டிஆரின் முதல் பாலிவுட் படம் என்பதால் அவரது ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில் படத்தில் 35 நிமிட காட்சிகளைத் தவிர, படம் முழுவதும் ஜூனியர் என்.டி.ஆர் காணப்படுவார் என்று கூறப்படுகிறது.
அயன் முகர்ஜி இயக்கி இருக்கும் இந்தப் படம் ஆகஸ்ட் 14 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.