எஸ்.ஜே.சூர்யா இயக்கும் படத்துக்காக ஜெர்மனியில் இருந்து பிஎம்டபிள்யூ கார் ஒன்று இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா, கடந்த சில வருடங்களாக நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் அவர் இயக்கும் கனவு படத்துக்கு கில்லர் என்று தலைப்பு வைத்துள்ளனர்.
இதில் பிரீத்தி அஸ்ராணி நாயகியாக நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யாவின் கனவு படமான இதில், காருக்கு முக்கியத்துவம் இருப்பதால், ஜெர்மனியில் இருந்து புதிய பிஎம்டபிள்யூ கார் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இதன் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் விரைவில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.