கூடுதல் வரதட்சணை கேட்டு மாடியில் இருந்து தள்ளி விட்டதாக எஸ்ஐ மகன் மீது வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் சைதாப்பேட்டையை சேர்ந்த அப்துல் சலாமின் மகள் நர்கீஸு-க்கும், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்த உதவி காவல் ஆய்வாளர் பாபாவின் மகன் காஜா ரபீக்-க்கும் திருமணம் நடந்தது.
இந்நிலையில், கூடுதல் வரதட்சணை கேட்டுக் கடந்த ஜூன் 3-ஆம் தேதி தன்னை மாடியில் இருந்து தள்ளிவிட்டு கணவர் காஜா ரபீக் கொலை செய்ய முயன்றதாக வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி புகார் அளித்துள்ளார்.
மேலும், மாடியில் இருந்து தள்ளிவிட்டதில் தனது இடுப்பு, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், தன்னை கொல்ல முயன்ற கணவர் மற்றும் மாமனார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.