சென்னை உயர்நீதிமன்றத்தின் மரபை உறுதி செய்யும் வகையில் பணியாற்றி, நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பேன் என புதிய தலைமை நீதிபதி எம்.எம். ஶ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் புதிய தலைமை நீதிபதிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பேசிய அவர், உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அல்லாமல், சேவகனாக பணியாற்றி நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பேன் என உறுதியளித்தார்.
மேலும், மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க, வெளிப்படைத்தன்மையுடன் நீதி நிர்வாகம் செயல்படும் எனவும் ஶ்ரீவஸ்தவா தெரிவித்தார்.