காசாவில் இஸ்ரேல் அரசின் உணவுப் பொருள் விநியோக முறை ஆபத்தானது எனப் பிரிட்டன் உள்ளிட்ட 24 நாடுகள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து அந்த நாடுகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், காஸாவில் நடைபெறும் போர் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸா மக்களின் துயரம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது எனக் கூறியுள்ள அந்த நாடுகள், இஸ்ரேல் அரசின் உணவுப் பொருள் விநியோக முறை காஸா மக்களின் கௌரவத்தைப் பறிக்கிறது எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைப் பெற முயலும் பொதுமக்களை மனிதாபிமானமில்லாமல் படுகொலை செய்வதைக் கண்டிப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.