நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் 2-ம் நாளான இன்றும், எதிர்க்கட்சியினரின் கடும் அமளியைத் தொடர்ந்து இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், 2-ம் நாளான இன்று இரு அவைகளும் காலை 11 மணிக்குத் தொடங்கின.
அவை நடவடிக்கைகள் தொடங்கியதும், பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூர் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
இதனால் முதலில் பகல் 12 மணி வரையும், பின்னர் 2 மணி வரையும் என இருமுறை இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
பிற்பகல் 2 மணிக்கு மக்களவை, மாநிலங்களவை மீண்டும் கூடியதும் எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.