சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் அப்ரூவராக மாறுவதாக முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொலை வழக்கானது 3 ஆண்டுகளுக்கு மேலாக மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், வழக்கானது மீண்டும் நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மனு ஒன்று தாக்கல் செய்தார்.
அதில், குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்பதால் தான் அப்ரூவராக மாற விரும்புவதாகவும், மற்ற காவலர்கள் செய்த அனைத்து செயல்களையும் நீதிமன்றத்தில் கூற விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த மனு மீது சிபிஐ அதிகாரிகள் பதிலளிக்க மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.