கடலூரில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்ததாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கடலூர் காவல் நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், கடலூரில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு நடைபெறுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்ததாகவும், அதனடிப்படையில் கடந்த இரண்டு நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.
புதுப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நர்சிங் பயிற்சி மையத்தில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்து வந்த சிவகுருநாதன், உமா மகேஸ்வரி உள்ளிட்ட 6 பேரை கைது செய்ததாகவும் கூறினார்.
நர்சிங் மையத்தில் இருந்து கருக்கலைப்பு சாதனங்கள், மாத்திரைகள் உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் எஸ்பி ஜெயக்குமார் தெரிவித்தார்.