அரியலூரில் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அசுத்தமாக குடிநீர் வருவதாக முறையிட்ட மக்களின் தண்ணீர் பாட்டிலை திமுக எம்எல்ஏ பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் பல்வேறு திட்டப் பணிகள் துவக்க விழாவிற்கு ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் பங்கேற்றார். அப்போது குடிநீர் சேறும் சகதியுமாக வருவதாக தண்ணீர் பாட்டிலுடன் எம்எல்ஏவின் காரை நோக்கி பொதுமக்கள் வந்தனர்.
அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் கலங்கலான தண்ணீர் பாட்டிலை காண்பித்து எம்எல்ஏ கண்ணனிடம் முறையிட்டபோது ஆத்திரமடைந்த எம்எல்ஏ திடீரென தண்ணீர் பாட்டிலை பிடுங்கி வேகமாக எறிந்ததுடன், காரில் புறப்பட்டு வேகமாக சென்றார்.
இதனால் அதிருப்தி அடைந்த மக்கள் எம்எல்ஏவின் காரை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அங்கிருந்த போலீசார் முற்றுகையிட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி எம்எல்ஏவின் காரை வழி அனுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.