கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உளுந்தூர்பேட்டை அரசு போக்குவரத்துக் கழக பணிமனையிலிருந்து கடலூருக்கு இயக்கப்பட இருந்த அரசு பேருந்தின் இன்ஜின் பகுதியில் திடீரென தீப்பொறி ஏற்பட்டு பேருந்து முழுவதிற்கும் தீ பரவியது.
பணிமனை ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நுரைக்கலவையை பயன்படுத்தி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. நல்வாய்ப்பாக பணிமனை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்ற பேருந்துகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.