காஞ்சிபுரம் குமரக்கோட்டம் கோயிலில் ஆடி மாத முதல் செவ்வாய்க்கிழமையை ஒட்டி முருகப் பெருமான் வெள்ளி தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காஞ்சிபுரம் மாநகரில் உள்ள பிரசித்தி பெற்ற குமரக்கோட்டம் சுப்பிரமணிய சாமி கோயிலில் ஆடி மாத முதல் செவ்வாய்க்கிழமையையொட்டி, வள்ளி தெய்வானை சமேத முருக பெருமானுக்குப் பல வண்ண பூக்களால் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டது.
தொடர்ந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி தேரில், வள்ளி – தெய்வானை சமேதராக தங்க நிற பட்டு உடுத்தி வைரம் வைடூரியம் ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு முருகப்பெருமான் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.
அப்போது அரோகரா அரோகரா எனப் பக்தி முழக்கமிட்டு பக்தர்கள் வெள்ளி தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.