திருப்பதி மலையில் மூன்றாவது காத்திருப்பு மண்டபம் கட்டுவது தொடர்பாக ஆலோசனை குழு அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி மலையில் உள்ள அன்னமய்யா பவன் கூட்ட அரங்கில் அறங்காவலர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஏழுமலையானைத் தரிசிக்க நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்கும் விதமாக 3வதாக வைகுண்ட காத்திருப்பு மண்டபத்தைக் கட்டவும், அதற்கான குழுவை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.