அரக்கோணம் வட்டாரத்தில் உள்ள 4 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒரு மாணவர் கூட சேராத அவலநிலை காணப்படுகிறது.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டாரத்தில் 121 அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இந்த பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் இதுவரை 705 மாணவர்கள் புதிதாகச் சேர்ந்துள்ள நிலையில், உள்ளியம்பாக்கம், கொளத்தூர், புது கேசாவரம் மற்றும் கிழவனம் ஆகிய 4 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், 4 அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறாதது குறித்து தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வட்டார கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
புதிய மாணவர் சேர்க்கையில் தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும், ஒற்றை இலக்கத்தில் உள்ள மாணவர்கள் எண்ணிக்கையை இரட்டை இலக்கத்தில் கொண்டு வரமுயற்சி மேற்கொள்ள வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.