அவதார் 3-வது பாகத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் படத்தின் முதல் பாகம் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்தது.
வசூலிலும் சாதனை நிகழ்த்தி 3 ஆஸ்கார் விருதுகளை வென்றது. பின்னர் 13 ஆண்டுகளுக்கு பிறகு அவதார் படத்தின் இரண்டாம் பாகமும் வெளியானது.
அதனைத் தொடர்ந்தே தற்போது அவதார் படத்தின் 3வது பாகமான ‘Avatar: Fire and Ash’ படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
இதன் டிரெய்லர் வரும் 25ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. அவதார் படத்தின் 3 ஆம் பாகம் இந்தாண்டு டிசம்பர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.