இங்கிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் வென்று, தொடரையும் இந்திய மகளிரணி கைப்பற்றியது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய மகளிரணி முதலில் டி20 தொடரை 3க்கு 2 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் போட்டியில் முதல் 2 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் 1க்கு 1 என சமநிலை வகித்தன.
தொடரை வெல்வது யார் என தீர்மானிக்கும் மூன்றாவது போட்டியில் இந்திய மகளிரணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 318 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய ஹர்மன் ப்ரீத் கவுர் 102 ரன்கள் குவித்தார்.
ஜெமிமா ரோட்ரிக்ஸ் அரை சதம் விளாசினார். கடின இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து மகளிரணி 49 புள்ளி 5 ஓவர்களில் 305 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இதன் மூலம் தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் இந்திய மகளிரணி வென்று சாதனை படைத்தது.