வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!
Sep 10, 2026, 06:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

Murugesan M by Murugesan M
Jul 24, 2025, 07:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடந்த ஆறு மாதங்களில், ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டில் இந்தியா மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் சரிவைச் சந்தித்து வரும் நிலையில், பாஸ்போர்ட் சக்தி குறியீட்டு பட்டியலில் இந்தியாவின் முன்னேற்றம் குறிப்பிடத்தக்கச் சாதனையாகப் பார்க்கப்படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பயணம் என்பது நவீன வாழ்க்கையின் இன்றியமையாத பகுதியாக மாறி விட்டது. பயணம் என்பது வெறும் ஆடம்பரம் என்ற நிலை இப்போது முற்றிலும் மாறிவிட்டது.  பொழுதுபோக்குச் சுற்றுலா என்பதைத் தாண்டி, ஓய்வு, வணிகம், கல்வி, மருத்துவம் மற்றும்  கலாச்சார ஆய்வு என பயணங்கள் அதிகரித்துள்ளன.

உள்நாட்டுப் பயணங்களை விடவும் வெளிநாட்டுப் பயணங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் தவிர்க்க முடியாத அங்கமாகி உள்ளது. ஒருவர் எவ்வளவு தூரம், எவ்வளவு சுதந்திரமாக உலகைச் சுற்றிவர முடியும் என்பதை வடிவமைப்பதில் பாஸ்போர்ட்டின் சக்தி முக்கிய பங்கு வகிக்கிறது.

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலை லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. விமானத் துறையில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், விசா இல்லாமல் அதிக நாடுகளுக்குச் செல்ல எந்த பாஸ்போர்ட் உதவுகிறது என்பதை வைத்து இந்த பாஸ்போர்ட் சக்தி குறியீட்டுப் பட்டியல்  உருவாக்கப் படுகிறது.

உலகின் 227 நாடுகளில், 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கக்கூடிய உலகின் மிகச் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக சிங்கப்பூர்  தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.  25 நாடுகளுக்கு மட்டுமே விசா இல்லாமல் செல்ல முடிந்த நிலையில், ஆப்கானிஸ்தான் உலகின் மிக மோசமான பாஸ்போர்ட்டாக உள்ளது.

ஜப்பான் மற்றும் தென் கொரியா 190 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லமுடியும் என்ற நிலையில்,  இரண்டாவது இடத்தைப் பகிர்ந்து கொள்கின்றன. டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய ஏழு ஐரோப்பிய யூனியன் நாடுகளின் பாஸ்போர்ட், மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த பாஸ்போர்ட் மூலம் 189 இடங்களுக்கு விசா இல்லாமல் செல்லமுடியும்.

நான்காவது இடத்தில்  ஆஸ்திரியா, பெல்ஜியம், லக்சம்பர்க், நெதர்லாந்து, நார்வே, போர்ச்சுகல் மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் உள்ளன.  இந்த நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் 188 இடங்களுக்கு விசா இல்லாமல் செல்லமுடியும்.  நியூசிலாந்து, கிரீஸ் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள், இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளன.

முந்தைய நிலையில் இருந்து, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தலா ஒரு இடம் பட்டியலில் பின்தங்கியுள்ளன. இங்கிலாந்து ஆறாவது இடத்துக்கும், அமெரிக்கா பத்தாவது இடத்துக்கும் சரிந்துள்ளது. இது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் உள்நாட்டுக் கொள்கைகளால் பாதிக்கப்பட்ட இடம்பெயர்வு காரணமாக ஏற்பட்ட விளைவாகும் என்று ஹென்லி & பார்ட்னர்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஜூர்க் ஸ்டெஃபென் கூறியுள்ளார்.

அமெரிக்கா முதல் முறையாக முதல் 10 நாடுகளிலிருந்து வெளியேறும் அபாயத்தில் உள்ளதாக  ஹென்லி & பார்ட்னர்ஸ் அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் 34 இடங்கள் முன்னேறி, ஐக்கிய அரபு அமீரகம், எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.  மேலும் இத்தனை குறுகிய காலத்தில் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்த ஒரே நாடு என்ற பெருமையைப் பெற்றுள்ளது ஐக்கிய அரபு அமீரகம்.

2015-ல் 94-வது இடத்தில் இருந்த சீனா 2025-ல் 34 இடங்கள் முன்னேறி 60வது இடத்தில் உள்ளது.  உலகளாவிய பாஸ்போர்ட் சக்தி குறியீட்டில், 5 இடங்கள் முன்னேறி 77வது இடத்தைப் பிடித்து  ஒரு வரலாற்றுச் சாதனையை இந்தியா படைத்துள்ளது. இப்போது விசா இல்லாமல், 59 நாடுகளுக்கு இந்தியர்கள் செல்லமுடியும்.

இந்த முன்னேற்றம், இந்தியாவின்  வளர்ந்துவரும் உலகளாவிய செல்வாக்கின் குறிப்பிடத் தக்க சான்றாக அமைந்துள்ளது. இந்தியாவின் பாஸ்போர்ட் சக்தியின் வளர்ச்சி என்பது, நாட்டின் வளர்ந்து வரும் இராஜதந்திர ஈடுபாடு , பொருளாதார வலிமை மற்றும் பயணத்தை எளிதாக்குவதற்கான நாட்டின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள்  ஆகியவற்றின் பிரதிபலிப்பாகும்.

வலிமையான பாஸ்போர்ட் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தி, வணிக பயணத்தை எளிதாக்கி, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Strongest Passport List: India improves to 77th position globallyஇந்தியா முன்னேற்றம்பாஸ்போர்ட் பட்டியல்pass portindia news today
Share
Tweet
SendShare
Previous Post

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

Next Post

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies