சீனாவில் தயாரிக்கப்படும் சோலார் மின்விசிறி தொப்பிகள், உலக நாடுகளில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
கிழக்கு சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள Yiwu என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இந்த சோலார் மின்விசிறி தொப்பிகள் வாடிக்கையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.
ஆகஸ்ட் மாதம் வரை ஆர்டர்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சோலார் மின்விசிறி தொப்பிகள் குறித்த வீடியோவை 24 மணி நேரத்தில் 90 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளதாகவும் கூறும் Yiwu நிறுவனம், இதன் மூலம் வெளிநாடுகளிலிருந்து 5 லட்சத்திற்கும் அதிகமான ஆர்டர்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.