மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடித் திருவாதிரை விழாவையொட்டி, அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் அரசின் சார்பில் முப்பெரும் விழா நடத்தப்பட்டது.
விழாவிற்கு வருகை தந்த அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மு.பெ.சாமிநாதன், ராஜேந்திரன், எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் எம்.பி. திருமாவளவன் ஆகியோர், கங்கைகொண்ட சோழபுரம் ஆலயத்தில் வீற்றிருக்கும் பிரமாண்ட சிவலிங்கத்தை வழிபட்டனர்.
மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழா, கங்கைகொண்ட சோழபுரம் கோவிலை அவர் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா என முப்பெரும் விழாவாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாட்டிய நாடகம், கிராமிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கேரளா மாநிலத்தில் குடை பிடித்தப்படி சாலையை கடக்க முயன்ற பெண் பேருந்து மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
கோழிகோட்டில் பெண் ஒருவர் குடை பிடித்தபடி பேருந்து வருவதை கவனிக்காமல் சாலையை கடக்க முயன்றார்.
அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்து பெண்ணின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.