கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மகளிர் உரிமைத்தொகை வரவில்லை எனக் கூறி அதிகாரிகள் மற்றும் காவலர்களுடன் பெண்மணி ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்துப் பல மாதங்கள் ஆகியும் தனக்கு மகளிர் உரிமை தொகை வரவில்லை என அந்த பெண்மணி வேதனை தெரிவித்தார்.
தொடர்ந்து, வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவருக்கு, திமுக கவுன்சிலர் மகாதேவி என்பவர் 100 ரூபாய் லஞ்சம் கொடுத்து, பேசாமல் இருக்கச் சொல்லியதால், அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.