அஜித்குமார் கொலை வழக்கில் 10வது நாளாக நடைபெற்ற சிபிஐ விசாரணையில் ஒன்பது இடங்களில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டன.
காவலர்கள் தாக்கி உயிரிழந்த அஜித்குமாரின் வழக்கில் 10-வது நாளாக சிபிஐ விசாரணை நடைபெற்றது. அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற ஒன்பது இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த சிபிஐ அதிகாரிகள், அவற்றில் பதிவான தரவுகளை PENDRIVE-ல் சேகரித்தனர்.
இதையடுத்து அவற்றை வரிசைப்படுத்திய அதிகாரிகள், சாட்சிகளாக பதிவு செய்தனர். அத்துடன் காவல் நிலையத்தில் உள்ள சில முக்கிய தரவுகளை ஆய்வு செய்த அதிகாரிகள், அவற்றை மதுரை சிபிஐ அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர்.