ஹரித்வாரில் 4 வயது சிறுவன் 225 கிலோ மீட்டர் தொலைவுக்கு கன்வார் யாத்திரை செல்வது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
வடமாநிலங்களில் சவான் மாதத்தில் பக்தர்கள கங்கையில் இருந்து புனித நீரை சேகரித்துகொண்டு, சிவாலயங்களுக்கு யாத்திரையாக சென்று அபிஷேகம் செய்வது வழக்கம். அதன்படி லட்சக்கணக்கான மக்கள் கன்வார் யாத்திரையை தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.
சில நாட்டுகளுக்கு முன்பு நடக்க முடியாத கணவரை அவரது மனைவி முதுகில் சுமந்துகொண்டு 150 கிலோமீட்டர் தூரத்திற்கு யாத்திரை சென்ற வீடியோ வெளியாகி அனைவரையும் நெகிழ செய்தது. தற்போது, 4 வயது சிறுவன் ஹரித்துவாரில் இருந்து 225 கிலோ மீட்டர் தூரத்திற்கு யாத்திரை மேற்கொண்டுள்ள வீடியோ வெளியாகியுள்ளது.
கங்கையில் இருந்து நீரை எடுத்துகொண்டு, கால்களில் செருப்பு கூட அணியாமல் அந்த சிறுவன் பயணம் மேற்கொண்டு வருகிறான். பல கிலோமீட்டர் நடந்துசெல்வதால் சிறுவனின் காலில் காயம் ஏற்பட்டு இரத்தம் சொட்டும் நிலை ஏற்பட்டது.
இருப்பினும் அதனை பொருட்படுத்தாமல் காலில் துணியை சுற்றிக்கொண்டு சிறுவன் தனது யாத்திரையை தொடர்ந்து வருகிறான். சிறுவனின் பக்தி நெகிழ்ச்சியடைய செய்வதாக பலரும் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.