சீனாவில் உள்ள ஏஐ ஆய்வகத்தை அமேசான் நிறுவனம் முழுமையாக மூடிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனா – அமெரிக்கா உடனான வர்த்தக மோதல் காரணமாகவும், சீன அரசின் கெடுபிடிகள் காரணமாகவும் அந்நாட்டில் இருந்து முக்கிய நிறுனங்கள் வெளியேறி வருகின்றன. கடந்த ஆண்டு, ஐபிஎம் நிறுவனம் சீனாவில் உள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அலுவலத்தை மூடியது. இதனால் ஆயிரம் பேர் வேலையிழந்தனர்.
அதேபோல, மைக்ரோசாப்ட் நிறுவனமும் நூற்றுக்கணக்கான ஊழியர்களை திரும்ப பெற்றது. ஆப்பிள், டெல் போன்ற நிறுவனங்களும் சீனாவில் உள்ள தங்களது நிறுவனங்களை வேறு பகுதிகளுக்கு மாற்றி வருகின்றன.
இந்நிலையில், சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள செயற்கை நுண்ணறிவு அலுவலகத்தை அமேசான் நிறுவனம் தற்போது மூடியுள்ளது. இதனால், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்னர். அடுத்தடுத்து முக்கிய நிறுவனங்கள் வெளியேறி வருவதால், சீனாவின் பொருளாதாரம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.