கரூர் மாவட்டம், தரங்கம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில், பிறப்பு சான்றிதழில் பெயர் திருத்தம் செய்ய 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற வட்டாட்சியர் கைது செய்யப்பட்டார்.
வீரணம்பட்டியைச் சேர்ந்த வேல்முருகன் – ரேவதி தம்பதியர் தங்கள் மகளின் பிறப்பு சான்றிதழில் பெயர் திருத்தம் செய்ய வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளனர். அப்போது புதிய பிறப்பு சான்றிதழை வழங்க, வட்டாட்சியர் சௌந்தரவள்ளி 5 ஆயிரம் ரூபாய் பணம் வழங்க வேண்டும் என கேட்டுள்ளார்.
இது தொடர்பாக தம்பதி அளித்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரசாயன பவுடர் தடவிய பணத்தை அவர்களிடம் கொடுத்தனுப்பினர். தொடர்ந்து அவர்களிடம் இருந்து பணத்தை பெற்ற வட்டாட்சியர் சௌந்தரவள்ளியை போலீசார் கையும், களவுமாக கைது செய்தனர்.