சீனாவில் கொளுத்தும் வெயிலால் வெப்பத்தைச் சமாளிக்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
சீனாவில் கோடைக்காலம் தொடர்ந்து நீடித்து வருகிறது. தலைநகர் பீஜிங் உள்ளிட்ட நகரங்களில் வெயில் கொளுத்துகிறது. குறிப்பாகச் சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் வெயில் 95 டிகிரிவரை நீடித்து வருகிறது.
இதனால் பொதுமக்கள், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வெயிலில் தவிக்கின்றனர். கடந்த ஒரே மாதத்தில் சீனாவில் நுகர்வோர் பயன்பாடு, தொழிற்சாலைகள் பயன்பாடு என மொத்தம் 150 கோடி கிலோவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.