மதுரை மாநகராட்சியைத் தொடர்ந்து அலங்காநல்லூர் பேரூராட்சியிலும் திமுக நிர்வாகிகள் ஊழலில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ள நிலையில், திமுகவைச் சேர்ந்த ரேணுகா ஈஸ்வரி பேரூராட்சி தலைவராகப் பதவி வகித்து வருகிறார்.
திமுக கவுன்சிலர்களுக்குள் கமிஷன் மோதல் இருப்பதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், அலங்காநல்லூர் பேரூராட்சியில் முறைகேடு குறித்து நடப்பதாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 11வது வார்டு திமுக கவுன்சிலர் மஞ்சுளா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், அலங்காநல்லூர் பேரூராட்சியில் அதிகளவில் ஊழல் நடைபெறுவதாகவும், மக்கள் வரிப்பணத்தை தவறாகப் பயன்படுத்தி கவுன்சிலர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.