கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே நியாய விலைக்கடைக்கு சொந்தமான அரிசி மூட்டைகள் கழிவறையில் சேமித்து வைக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராயக்கோட்டையில் செயல்பட்டு வந்த நியாய விலைக்கடை தற்காலிகமாக உழவர் சந்தையில் உள்ள மலர் வணிக வளாகத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு அரிசி மூட்டைகள் உள்ளிட்ட பொருட்களை வைப்பதற்கு போதிய இடவசதி இல்லாததால் கழிவறையில் அரிசி மூட்டைகள் வைக்கப்பட்டது.
துர்நாற்றம் வீசியும், அசுத்தமான நிலையில் காட்சியளிக்கும் கழிவறையில் அரிசி மூட்டைகள் அடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக விற்பனையாளரிடம் கேள்வி எழுப்பியபோது போதிய இடவசதி இல்லாததால் கழிவறை பயன்படுத்தப்பட்டது என அலட்சியமாக பதிலளித்தது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.