தர்ஷன், காளி வெங்கட் நடிப்பில் உருவாகியுள்ள House mates படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி வைரலாகி வருகிறது.
ராஜவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை, சிவகார்த்திகேயனின் SK ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் மற்றும் ப்ளேஸ்மித் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன.
படம் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வெளியாக உள்ள நிலையில், டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. இந்நிலையில் ஷான் ரோல்டன் பாடியுள்ள படத்தில் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி வைரலாகி வருகிறது.