மயிலாடுதுறை அடுத்த பொய்கை குடி கிராமத்தில் சிறுமியின் இறப்புக்கு நீதிகேட்டுப் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
காமராஜர் – சரண்யா தம்பதியின் 5 வயது மகள் சஹானாஸ்ரீ, வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருந்தபோது சுவர் இடிந்து விழுந்ததில் படுகாயமடைந்தார்.
அவரை மீட்ட பெற்றோர் காளி கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு மருத்துவர் இல்லாததால், மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல செவிலியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால் 108 ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதமானதால் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், ஆரம்பச் சுகாதார நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் திருமங்கலம் – மணல்மேடு சாலையில் 4 மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.