சென்னை திருவொற்றியூரில் கோயில் பூட்டை உடைத்து சுவாமியின் நகை மற்றும் பணத்தைத் திருடிய தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.
ஒத்தவடை தெருவில் உள்ள பவானி அம்மன் கோயிலில் பணிகளை மேற்கொள்ளப் பூசாரி நாகம்மா வந்துள்ளார்.
அப்போது கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்ட அவர், அம்மன் கழுத்தில் இருந்த தாலி பொட்டு மாயமாகியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து காவல்துறைக்குக் கிடைத்த தகவலின்பேரில் விசாரணை நடத்திய அதிகாரிகள், திருட்டில் ஈடுபட்ட உமாபதி மற்றும் அவரது மகன் காசி விஸ்வநாதனைக் கைது செய்து நகை மற்றும் பணத்தை மீட்டனர்.