வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடரில் வெற்றி பெற்ற மிக வயதான வீராங்கனை என்ற சாதனையை வீனஸ் வில்லியம்ஸ் படைத்துள்ளார்.
வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் வில்லியம் எச்.ஜி. ஃபிட்ஸ்ஜெரால்ட் டென்னிஸ் மையத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 45 வயதான வீனஸ் வில்லியம்ஸ் வெற்றி பெற்றார்.
இதன் மூலம் 2004 ஆம் ஆண்டுக்குப் பிறகு போட்டியில் வென்ற மிக வயதான வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
இந்த வெற்றிக்குப் பின் அவர் தனது நீண்ட கால நண்பரும் நடிகருமான ஆண்ட்ரியா பிரீட்டியை திருமணம் செய்ய உள்ளதாகவும் அறிவித்தார்.