ஜப்பானில் நடைபெற்ற ஆசிய – பசிபிக் மாநாட்டில் பங்கேற்ற அனுபவம் மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளதாக மதுரையைச் சேர்ந்த சிறுமி திவ்யஸ்ரீ தெரிவித்துள்ளார்.
ஆசியாவில் உள்ள 11 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான மாநாடு ஜப்பானில் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சிறுமிகள் பங்கேற்று இருந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த திவ்யஸ்ரீ என்ற சிறுமி ஏபிசிசி அமைப்பு சார்பில் ஜப்பானுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
7 நாட்கள் நடைபெற்ற மாநாட்டில் பல்வேறு கலைத்திறன், கலாச்சாரத்தைச் சிறுமிகள் வெளிப்படுத்திய நிலையில், சிறுமி திவ்யஸ்ரீ நடன நிகழ்ச்சியில் பங்கேற்று அசத்தினார். இந்நிலையில், சொந்த ஊர் திரும்பிய மாணவிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த சிறுமி, மாநாட்டில் பங்கேற்ற அனுபவம் உற்சாகத்தை அளித்ததாகக் கூறினார்.