விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரியில் ஆடி அமாவாசையையொட்டி அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.
தாணிப்பாறை அடிவாரத்தில் இருந்து பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வரும் நிலையில், சதுரகிரியில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.