விநாயகர் சதுர்த்தி விழாவைச் சீர்குலைக்க முயற்சிக்கும் நபர்களைக் கைதுசெய்ய வலியுறுத்தி திருப்பூரில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் குமரன் சிலை முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.
அப்போது பேசிய இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் கிஷோர் குமார், திமுக ஆட்சியில் மக்களுக்குப் போராடுவதற்கான உரிமை மறுக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டினார். முரடர்களுக்கு திமுக முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் விமர்சித்தார்.