விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே லாரி ஓட்டுநர் முகத்தில் மிளகாய்ப் பொடி தூவி 8 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.
திருப்பத்தூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சப்தகிரி சென்னையில் இருந்து நாமக்கலுக்கு முட்டை ஏற்றி வர சென்றுள்ளார்.
விக்ரவாண்டி அருகே இயற்கை உபாதை கழிப்பதற்காக சப்தகிரி லாரியை நிறுத்தியதாக கூறப்படுகிறது.
அப்போது சொகுசு காரில் அவரை பின் தொடர்ந்து வந்த இரு மர்ம நபர்கள், சப்தகிரியின் முகத்தில் மிளகாய் பொடியை தூவிவிட்டு லாரியில் இருந்த 8 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர்.
இது தொடர்பாக சப்தகிரி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.