வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி 20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் சேர்த்தது.
173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 15.2 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா அணி 2 க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.