மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து 6 ஆயிரத்து 688 நிறுவனங்கள் நாட்டின் பிற மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்தது.
நாடாளுமன்ற அவையில் மத்திய கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சகம் எழுத்துப்பூர்வ விளக்கம் ஒன்றைக் கொடுத்தது.
அதில் கடந்த 2011ம் ஆண்டு முதல் தற்போது வரை மேற்குவங்க மாநிலத்தில் செயல்பட்டு வந்த 6 ஆயிரத்து 688 வணிக மற்றும் தொழில் உற்பத்தி நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாகவும், அவை அனைத்தும் டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளது எனவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.