அல் – கொய்தா பயங்கரவாதிகள் எனச் சந்தேகிக்கப்படும் நான்கு பேரை, குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
ஜம்மு – காஷ்மீர் மற்றும் அண்டை நாடுகளான வங்கதேசம், மியான்மரில் அல் – கொய்தா பயங்கரவாத அமைப்பு தங்கள் கிளைகளை பரப்ப முயற்சி செய்து வருவதாக, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் சில தினங்களுக்கு முன் எச்சரித்திருந்தது.
இந்த எச்சரிக்கையின் எதிரொலியாகப் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் நாடு முழுவதும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில், அல் – கொய்தா பயங்கரவாதிகள் எனச் சந்தேகிக்கப்படும் நான்கு பேரை, குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இவர்கள் பயங்கரவாத செயல்களுக்கு ஆட்கள் திரட்டி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.