சென்னை ஆலந்தூரில் ஏழு வயது சிறுமி, தந்தையால் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர், மனைவி ரேபிகாவுடன் ஏற்பட்ட தகராறில் அவரை பிரிந்து, 7 வயது மகள் ஸ்டெபிரோஸுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில், மகளை சென்னை ஆலந்தூரில் உள்ள தனியார் ஓட்டலுக்கு அழைத்துச் சென்று கொன்று விட்டு, சதீஷ்குமாரும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
சதீஷ்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது மனைவி ரேபிகா, ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் பேரில், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் ரேபிகாவின் கணவர் சதீஷ்குமார், மாமனார் கந்தசாமி, மாமியார் ரஞ்சினி ஆகியோர் மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.