அரிதான மரபணு நோய் எதிர்ப்பு குறைபாடு இருந்த 33 வயதான பெண்ணுக்கு, சிக்கலான எலும்பு மஜ்ஜை அறுவை சிகிச்சையைச் சென்னை எம் ஜி எம் மருத்துவமனை வெற்றிகரமாகச் செய்துள்ளது.
முதன்மை நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு என்பது வயது வந்தவர்களிடையே மிகவும் அரிதாகக் காணப்படும் ஒரு மரபணு குறைபாடு ஆகும்.
உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அணுக்களின் உற்பத்தியைக் குறைக்கும் இக்குறைபாடு நோயாளிகளுக்குத் தீவிரமான இரத்தப் புற்றுநோயை உண்டாக்கும் எனக் கூறப்படுகிறது.
அத்தகைய கடுமையான பாதிப்புக்குள்ளான ஒரு நோயாளிக்குச் சென்னை எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியுட்டில் வழங்கப்பட்ட எலும்பு மஜ்ஜை சிகிச்சையின் மூலம் அவரது வாழ்க்கை மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பியுள்ளது.