திருமணத்தை மீறிய உறவுக்காகத் தனது இரண்டு குழந்தைகளைக் கொன்ற அபிராமிக்குச் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரைச் சேர்ந்த விஜய் – அபிராமி தம்பதிக்குத் திருமணமாகி, நான்கு மற்றும் ஆறு வயதில் 2 குழந்தைகள் இருந்தனர். டிக்டாக்கில் பிரபலமான அபிராமிக்கு அந்த பகுதியைச் சேர்ந்த பிரியாணிக் கடையில் பணியாற்றும் மீனாட்சி சுந்தரம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
திருமணம் தாண்டிய இந்த உறவுக்குத் தடையாக இருந்த தனது 2 குழந்தைகளுக்கும் கடந்த 2018-ம் ஆண்டு பாலில் விஷம் வைத்து, அபிராமி கொலை செய்தார்.
பின்னர், மீனாட்சி சுந்தரத்துடன், கேரளா தப்பிச் செல்ல முயன்றபோது, இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், குற்றவாளிகள் அபிராமி மற்றும் மீனாட்சி சுந்தரத்திற்கு 3 ஆயுள் தண்டனை மற்றும் சாகும் வரை சிறைத் தண்டனை விதித்து காஞ்சிபுரம் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.