இந்தியா-பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்தியா – பிரிட்டன் இடையே கடந்த மே 6ஆம் தேதி தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடியின் பிரிட்டன் பயணத்தின்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அரசுமுறை பயணமாகப் பிரதமர் மோடி பிரிட்டன் சென்ற நிலையில், அங்கு இரு நாடுகளுக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் பிரிட்டன் வர்த்தகத்துறை அமைச்சர் ஜொனாத்தன் ரெனால்ட்ஸ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
பின்னர் பேசிய பிரதமர் மோடி, பிரிட்டன் உடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார். மேலும் இந்த ஒப்பந்தம் மூலம் இந்திய இளைஞர்கள், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்டோர் பயனடைவார்கள் என்றும் அவர் கூறினார். மேலும் இரண்டு ஜனநாயக நாடுகளுக்கு இடையிலான இந்த ஒப்பந்தம் உலகளவில் செழிப்பை ஏற்படுத்தும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
தொடர்ந்து அங்கு நடைபெற்ற வணிக கண்காட்சியைப் பிரதமர் மோடி பார்வையிட்டார். பின்னர் பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மருடன் தேநீர் அருந்தி பிரதமர் மோடி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.