வேலூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு வந்த மேயரை சூழ்ந்து கொண்ட பொதுமக்கள், அடிப்படை வசதிகள் குறித்து சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.
வேலூர் மாநகராட்சியின் முப்பத்தி நான்காவது வார்டு பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு பிரச்சனைகள் சார்ந்து புகார் மனுக்களை அளித்தனர்.
அப்போது முகாமிற்கு வருகை தந்திருந்த வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதாவைப் பொதுமக்கள் திடீரென சூழ்ந்து கொண்டு சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.
சிறப்பு முகாம் நடைபெறும் இடம் உட்பட தங்கள் பகுதியில் உள்ள பல தெருக்களில் முறையான கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை எனவும் தெருவோரங்களில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் துர்நாற்றம் வீசி நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் குற்றம் சாட்டினர்.