உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் சாக்கடை கழிவுநீர் வடிகால் வசதி ஏற்படுத்தித் தரக் கோரி பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 5 வது வார்டு மாயாண்டித் தேவர் தெருவில் 100 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இங்கே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சாக்கடை கழிவுநீர் வடிகால் வசதியின்றி அவதிப்படுவதாகவும் சாக்கடை கழிவுநீர் அவ்வப்போது தெருவில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டிய பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
தகவலறிந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.