ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் பிரசித்தி பெற்ற ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆடிப்பூர திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பெரியாழ்வார் மங்களாசாசன வைபவம் நேற்று நடைபெற்றது.
இதனையொட்டி ஆடிப்பூர கொட்டகையில் எழுந்தருளிய பெரிய பெருமாள், சுந்தர்ராஜபெருமாள், ஸ்ரீனிவாச பெருமாள், திருத்தங்கல் அப்பன், ஆண்டாள் ரெங்கமன்னார் ஆகியோருக்கு பெரியாழ்வார் மங்களாசாசனம் செய்து வைத்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.