திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே திமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேட்டுப்பட்டியை சேர்ந்த முருகன் என்பவர் திண்டுக்கல் மாநகராட்சி பணிகளின் ஒப்பந்ததாரராக இருந்தார். திமுக பிரமுகரான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முன்பகை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் முருகன், தனது காருக்குள் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார். தகவல் அறிந்து சென்ற போலீசார், சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி முருகனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.