எல்லை பிரச்சனை தொடர்பாகத் தாய்லாந்து – கம்போடியா ராணுவ வீரர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகள் இடையே கடந்த மே மாதத்தில் மோதல் போக்கு ஏற்பட்டது.
அப்போது, கம்போடியா ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். இதனால், இரு நாடுகள் இடையே பதற்றமான சுழல் உருவானது.
இந்நிலையில், இரு நாடுகளைச் சேர்ந்த ராணுவ வீரர்களும் எல்லைப் பகுதியில் மோதிக் கொண்டனர். அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர். 14 பேர் படுகாயமடைந்தனர்.