தேனி மாவட்டம் புதுக்குளத்தில் விபத்தில் காயமடைந்தவர்களை ஏற்றி செல்ல 108 ஆம்புலன்ஸ் வர தாமதமானதால், காயமடைந்தவர்களுக்குக் கொட்டும் மழையில் குடை பிடித்துக் காவல் காத்த போலீசாரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கம்பம் பகுதியைச் சேர்ந்த ஷரிப், ஆறுமுகம் ஆகியோர், புதுக்குளம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக, ஏற்பட்ட விபத்தில், இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.
ஆம்புலன்ஸ் வர சுமார் ஒரு மணி நேரம் தாமதமானதால், கொட்டும் மழையில் காயமடைந்தவர்களுக்கு போலீசார் குடை பிடித்துப் பாதுகாத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.