கோவைக் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட டெய்லர் ராஜாவை மேலும் 2 வழக்குகளில் போலீசார் கைது செய்தனர்.
கோவைக் குண்டு வெடிப்பு வழக்கில் 28 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த டெய்லர் ராஜா அண்மையில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர் மீதான பிற வழக்குகளையும் விசாரிக்கத் தொடங்கிய போலீசார், கடந்த 1996ஆம் ஆண்டு நாகூரில் நடைபெற்ற பெண் கொலை வழக்கிலும், 1997ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற ஜெயிலர் கொலை வழக்கிலும் டெய்லர் ராஜாவுக்குத் தொடர்பு இருப்பதைக் கண்டறிந்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், டெய்லர் ராஜாவை கைது செய்து அதற்கான ஆணையைச் சிறையில் இருக்கும் அவரிடமே வழங்கினர்.
இந்த வழக்குகள் தொடர்பாக டெய்லர் ராஜாவை காவலில் எடுக்கத் திட்டமிட்டுள்ள போலீசார், காணொலி மூலம் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.